Categories
அரசியல்

வங்கியில் பணம் போட போறீங்களா?…. எந்த வங்கியில் எவ்வளவு வட்டி?…. இதோ மொத்த லிஸ்ட்….!!!!!

இன்றைய காலகட்டத்தில் வாங்கும் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை எதிர்காலத்திற்காக சேமித்து வைக்க வேண்டும் என்று பலரும் கருதுகின்றனர். அவ்வாறு சேமிக்க நினைப்பவர்கள் எந்தவித ரிஸ்க் இல்லாமல் அதிக லாபம் தரும் பாதுகாப்பான முதலீட்டை கருதுகிறார்கள். அதற்கு சிறந்த தேர்வு பிக்சட் டெபாசிட் திட்டங்கள் தான். பிக்சட் டெபாசிட் என்பது ஒரு நிலையான வைப்பு நிதி திட்டம்.

இது பொது மக்களுக்கு அதிகம் லாபம் தரக்கூடிய திட்டமாகும். இந்தியாவில் உள்ள முன்னணி வங்கிகளில் பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு அதிக வட்டி வழங்கப்பட்டு வருகிறது. இது போன்ற பிக்சட் டெபாசிட் திட்டங்களின் முதலீடு செய்ய முடிவு செய்தால் எந்த வங்கியில் முதலீடு செய்வது என்று முதலில் ஆலோசனை செய்ய வேண்டும். ஒவ்வொரு வங்கிகளிலும் வட்டி விகிதம் மாறுபடும். அதன்படி இந்தியாவில் உள்ள முன்னணி வங்கிகளில் சாதாரண வாடிக்கையாளர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு எவ்வளவு வட்டி வழங்கப்படுகிறது என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா!

வட்டி – 2.90% முதல் 5.50%
மூத்த குடிமக்கள் – 3.40% முதல் 6.30%

HDFC வங்கி!

வட்டி – 2.50% முதல் 5.75%
மூத்த குடிமக்கள் – 3.00% முதல் 6.50%

ஐடிபிஐ வங்கி!

வட்டி – 2.70% முதல் 5.60%
மூத்த குடிமக்கள் – 3.20% முதல் 6.35% வரை

கோடக் மஹிந்திரா வங்கி!

வட்டி – 2.50% முதல் 5.90%

மூத்த குடிமக்கள் – 3.00% முதல் 6.40%

RBL வங்கி!

வட்டி – 3.25% முதல் 6.65% வரை
மூத்த குடிமக்கள் – 3.75% முதல் 7.15%

பஞ்சாப் நேஷனல் வங்கி!

வட்டி – 3.00% முதல் 5.60%
மூத்த குடிமக்கள் – 3.50% முதல் 6.10%

கனரா வங்கி!

வட்டி – 2.90% முதல் 5.75%
மூத்த குடிமக்கள் – 2.90% முதல் 6.25%

ஆக்சிஸ் வங்கி!

வட்டி – 2.50% முதல் 5.75%
மூத்த குடிமக்கள் – 2.50% முதல் 6.50%

பேங்க் ஆஃப் பரோடா!

வட்டி – 2.80% முதல் 5.35%
மூத்த குடிமக்கள் – 3.30% முதல் 6.35%

IDFC ஃபர்ஸ்ட் பேங்க்!

வட்டி – 3.50% முதல் 6.50% வரை
மூத்த குடிமக்கள் – 4.00% முதல் 7.00% வரை

பேங்க் ஆஃப் இந்தியா!

வட்டி – 2.85% முதல் 5.20%
மூத்த குடிமக்கள் – 3.35% முதல் 5.95%

பஞ்சாப் & சிந்து வங்கி!

வட்டி – 3.00% முதல் 5.40%
மூத்த குடிமக்கள் – 3.50% முதல் 5.90%

Categories

Tech |