இன்றைய காலகட்டத்தில் அவசர தேவைகளுக்கு கடன் வாங்க வேண்டும் என்றால் அனைவரும் வங்கியை நாடித்தான் செல்கிறோம். வங்கிகளில் தனிநபர் கடன் பெறுவதற்கு எதையும் அடமான வைக்க வேண்டிய அவசியம் இல்லை.சமீபத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் பெரும்பாலான வங்கிகள் தனிநபர் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளன. இருந்தாலும் குறைந்த பட்டியில் தனிநபர் கடன் வழங்கும் சில வங்கிகளும் உள்ளது.
அதன்படி குறைந்த வட்டியில் தனி நபர் கடன் வழங்கும் வங்கிகளில் ஒன்றுதான் மகாராஷ்டிரா வங்கி. இந்த வங்கி 8.9% வட்டி விகிதத்தில் தனிநபர் கடன் வழங்கி வருகிறது. அடுத்ததாக பேங்க் ஆப் இந்தியா 9.75 சதவீதம்,பஞ்சாப் நேஷனல் வங்கி ஒன்பது புள்ளி எட்டு சதவீதம் என்ற அளவில் தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் வழங்குகிறது.
மேலும் பேங்க் ஆப் பரோடா 10.2%, கோடக் மகேந்திரா வங்கி 10.25 சதவீதம், இந்தியன் வங்கி 10. 30 சதவீதம், ஐ டி எப் சி வங்கி,விண்டோஸ் இன்டு வங்கி மற்றும் பெடரல் வங்கி தனிநபர் கடனுக்கு பத்து முதல் 12 சதவீதம் வட்டி வழங்குகிறது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி 10 .49 சதவீதம், பஞ்சாப் அண்டு சிந்து வங்கி 10.55 சதவீதம், ஐசிஐசிஐ வங்கி 10.5% , ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஐடிபிஐ வங்கி 11 சதவீதம், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா 11.25 சதவீதம், ஆக்ஸிஸ் வங்கி 12 சதவீதம் வட்டியில் கடன் வழங்குகின்றன.