பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்களின் பழைய குறியீடுகள் மார்ச் 31க்கு பிறகு இயங்காது என அறிவித்துள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கி தனது அனைத்து கிளைகளின் IFSC மற்றும் MICRகுறியீடுகளை ஏப்ரல் 1ம் தேதி முதல் மாற்ற உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி பழைய குறியீடுகள் மார்ச் 31 பிறகு இயங்காது. ஆன்லைனில் பணத்தை மாற்றினால், அதற்காக வங்கியிலிருந்து புதிய குறியீட்டை பெறவேண்டும். எனவே வாடிக்கையாளர்கள் தங்கள் காசோலை புத்தகம், IFSC code போன்றவற்றை மாற்றவும். மேலும் இதுபற்றி தகவலுக்கு வங்கியின் 18001802222, 18001032222 ஆகிய கட்டணமில்லா எண்களை தொடர்பு கொள்ளவும்.