வங்கி பணியாளர் தேர்வு நிறுவனமானது இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகளில் இருந்து காலி பணியிடங்கள் உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி 6,432 காலி பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் கனரா வங்கியில் இருந்து மட்டும் po பதவிக்கு 2500 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களை நிரப்ப டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் இதற்கு விண்ணப்பிக்க வருகின்ற ஆகச் 22 ஆம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தகவலுக்கு> https://www.ibps.in/wp-content/uploads/Detailed-Advt.-CRP-PO-XII.pdf
சம்பளம்: ரூ. 52,000 முதல் ரூ. 55,000 வரை
காலி பணியிடங்கள்: 6,432
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 22
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்