பீகார் மாநிலத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவரின் வங்கி கணக்கு திறக்கப்படாத நிலையில் அவரது பெயரில் ஏற்கனவே வங்கி கணக்கு திறந்து இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியின் விபின் சவுகான். இவர் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் இணைவதற்கு வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு சென்று கணக்கு தொடங்கியுள்ளார். அந்த சேவை மைய அலுவலர், விபின் சவுகான் ஆதார் எண்ணை பதிவு செய்து வங்கி கணக்கை தொடங்க முயற்சி செய்தபோது அவர் பெயரில் ஏற்கனவே கணக்கு
இருப்பது தெரியவந்தது. மேலும் அந்த வங்கி கணக்கில் 9 கோடியே 99 லட்சம் வரை டெபாசிட் செய்யப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். முதன்முறையாக வங்கி கணக்கை தொடங்க விரும்பிய அவருக்கு இது மிகப் பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.
இதுகுறித்து வங்கி அதிகாரிகளை தொடர்புகொண்டு சவுகான் தெரிவித்தார். விபின் சவுகான் பேரில் கடந்த 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வங்கி கணக்கு தொடங்கப்பட்டு, 2017ஆம் ஆண்டு வரை கோடிக்கணக்கில் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டது தெரிய வந்தது. ஆனால் சவுகான் பெயரில் உள்ள வங்கிக் கணக்கில் அவரின் புகைப்படம், கைரேகை இடம்பெறவில்லை. இதில் ஆதார் எண் மட்டுமே அவருடையதாக இருந்தது. இதுகுறித்து வங்கி அதிகாரி தெரிவிக்கையில்: சவுகான் புகார் அளித்த காரணத்தினால் வங்கி கணக்கை முடக்கி விட்டோம். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.