Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வங்கி அதிகாரி போல பேசிய நபர்…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. தீவிர விசாரணை நடத்தும் போலீஸ்…!!

வங்கி அதிகாரி போல பேசி பண மோசடியில் ஈடுபட்ட மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ராஜகோபாலபுரம் பகுதியில் பழனிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது கைப்பேசி எண்ணிற்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பணிபுரியும் அதிகாரி போலவே மர்ம நபர் ஒருவர் பேசியுள்ளார். அதன்பின் அந்த நபர் பழனிசாமியிடம் அவரது கிரெடிட் கார்டு பற்றிய விவரம் குறித்து கேட்டுள்ளார். இதனால் கைப்பேசியில் பேசிய நபர் உண்மையாகவே வங்கியில் பணிபுரியும் அதிகாரி என்று நம்பி பழனிச்சாமியும் கிரெடிட் கார்ட் பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிவித்துள்ளார். பின்னர் பழனிசாமியின் வங்கி அக்கவுண்டிலிருந்து பலமுறை பணம் எடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த பழனிசாமி புதுக்கோட்டையிலுள்ள சைபர் கிரைம் காவல்நிலையத்தில் தனது அக்கவுண்டில் உள்ள ரூபாய் 1 லட்சத்து 38 ஆயிரத்து 370  மர்ம நபரால் மோசடி செய்யப்பட்டுள்ளதாக புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களின் பண மோசடி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால் பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்குமாறு காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Categories

Tech |