மத்திய அரசு பல்வேறு அரசு துறைகளை தனியார்மயமாக்கி வருகின்றது. அந்தவகையில் அரசு வங்கிகள் தனியார்மயமாக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எனவே இதனை எதிர்த்து AIBEA, AIBOC, NCBE, AIBOA, BEFI, INBEF, IBOC, NOBW, NOBO, AINBOF ஆகிய வங்கி சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த அனைத்து வங்கிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளன. இதுகுறித்து கனரா வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொதுத்துறை வங்கி தனியார் மயமாக்க அரசு முடிவுசெய்துள்ளது.
இதனை எதிர்த்து இந்திய வங்கிகள் சங்கம் ஆகிய வங்கிகள் சங்கங்கள் மன்றமும் வரும் மார்ச் 15 மற்றும் 16 தேதிகளில் போராட்டம் நடத்த அனைத்து வங்கிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளன. இந்த போராட்ட நாட்களில் வங்கிகள் இயங்குவதில் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் செயல்பட தேவையான நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கிவிட்டால் வங்கி சேவைகள் பாதிக்கப்படும் என்று கனரா வங்கி தெரிவித்துள்ளது.