Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வங்கி ஊழியருக்கு கண்டறியப்பட்ட தொற்று… இதை உடனே மூடுங்க… நகராட்சி ஆணையாளர் அதிரடி உத்தரவு..!!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் வங்கி ஊழியருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை தியாகிகள் சாலையில் வங்கி ஒன்று இயங்கி வருகிறது. அந்த வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றும் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சிகிச்சைக்காக அந்த ஊழியர் அழைத்துச் செல்லப்பட்டார். மேலும் வங்கியை நகராட்சி ஆணையாளர் ஜெகநாதன் உடனடியாக ஒரு நாள் மூடுவதற்கு உத்தரவு பிறப்பித்தார்.

இதனைத்தொடர்ந்து சுகாதாரத்துறை ஊழியர்கள், நகராட்சி சுகாதார ஆய்வாளர் ராஜாமணி தலைமையில் வங்கி முழுவதும் கிருமிநாசினி தெளித்தனர். இதையடுத்து வெளிப்புறத்தில் உள்ள ஏ.டி எம். மையங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வங்கி உடனடியாக மூடப்பட்டது. நகை மதிப்பீட்டாளருடன் தொடர்பில் இருந்த வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் பரிசோதனை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது. அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள், வங்கி ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

Categories

Tech |