Categories
தேசிய செய்திகள்

வங்கி ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு…. மத்திய அரசு மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் அரசு ஊழியர்களை தொடர்ந்து வங்கி ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 28 விழுக்காடு ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதனால் அனைத்து பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கும் இந்த மாதம் முதல் சம்பளம் உயரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. பொதுத்துறை வங்கி ஊழியர்கள் அனைவருக்கும் அகவிலைப்படி 25.69 விழுக்காட்டிலிருந்து 27.79 விழுக்காடு ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் ஆகிய மூன்று மாதங்களில் வங்கி ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் பயன்பெறுவார்கள். 2017 ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி அல்லது அதற்கு பிறகு பணி ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்கள் அனைவருக்கும் பென்சில் தொகையுடன் அகவிலைப்படி உயர்வு கிடைக்கும்.

மேலும் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூன் மாதத்திற்கு மூன்று விழுக்காடு அகவிலைப்படி. இதுமட்டுமல்லாமல் ஹரியானா, ஜார்கண்ட் உள்ளிட்ட சில மாநில அரசுகளும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 28 விழுக்காடாக உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |