அரசு ஊழியர்களையடுத்து தற்போது வங்கி ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை 28 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் அனைத்து பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கும் இந்த மாதம் முதல் சம்பளம் உயர்வுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கான அகவிலைப்படி 25.6 9 விழுக்காட்டிலிருந்து 27.79 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதனை ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் ஆகிய மூன்று மாதங்களில் வங்கி ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பால் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் பயனடைவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.