வங்கி தொடங்குவதற்கான விதிமுறைகள் குறித்து இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.
தனியாக வங்கி தொடங்கி நிர்வகிக்க வேண்டும் என விரும்புபவர்கள் குறைந்தது 10 வருடங்கள் வங்கி பற்றிய அனுபவத்தை பெற்றிருக்க வேண்டும். இதற்காக ரிசர்வ் வங்கியிடம் முறையாக அனுமதி பெற வேண்டும். தனியாக வங்கி தொடங்க விரும்புபவர்கள் குறைந்தது 500 கோடி முதலீடு செய்ய வேண்டும். இதனையடுத்து வங்கி தொடங்கி 6 வருடங்கள் முடிவடைந்த பிறகு பங்கு சந்தை விவரங்களை பட்டியலிட வேண்டும். ஒரு வங்கியின் இயக்குனர் குழுவில் அதிகபட்சமாக தனிப்பட்ட இயக்குனர்கள் இருக்க வேண்டும்.
ஒரு சாதாரண தனிநபர் வங்கி தொடங்குவதற்கு ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பிக்கலாம். ஆனால் டாடா, ரிலையன்ஸ், பஜாஜ் போன்ற பெரிய நிறுவனங்கள் வங்கி தொடங்க முடியாது. இதேபோன்று பொதுத்துறை நிறுவனங்களுக்கும் வங்கி தொடங்குவதற்கான அனுமதி கிடையாது. இந்நிலையில் 500 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 25% கிளைகள் கிராமப்புறங்களில் தொடங்க வேண்டும் என்ற விதிமுறை இருப்பதால் பெரும்பாலானோர் வங்கி தொடங்குவதற்கு முன் வருவது கிடையாது.
நாம் வங்கி ஆரம்பிப்பதற்கு முதலீடு செய்த தொகையில் 10 சதவீதத்தை ரிசர்வ் வங்கிக்கு கொடுக்க வேண்டும். அதன்பின் மீதி இருக்கும் 90 சதவீதத்தை வைத்து நாம் வங்கியை நிர்வகிக்கலாம். இந்த பணத்தை வைத்து எப்படி வங்கியை நிர்வகிக்கலாம் என பார்க்கலாம். இதில் 3 முக்கிய விதி முறைகள் பின்பற்றப்படுகிறது. முதலில் வங்கிகள் கடன் கொடுக்கிறது. அதாவது வீட்டுக்கடன், தொழில் தொடங்குவதற்கான கடன், கல்விக் கடன் போன்ற பல்வேறு கடன்களை வழங்குகிறது. இதன் மூலம் கிடைக்கும் வட்டி வங்கிகளுக்கு லாபமாகும். இதனையடுத்து கிரெடிட் கார்டு மற்றும் இன்வெஸ்டிங் என்ற 2 முறைகளை பயன்படுத்தி வங்கிகள் இயங்குகிறது.