தான் வாங்கிய வங்கிக் கடனை ரத்து செய்ய வலியுறுத்தி மாற்றுத்திறனாளி ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மாற்றுத்திறனாளி ஒருவர் அவரது இருசக்கர வாகனத்தில் வந்தார். பின்னர் அவரது கோரிக்கை மனுவை கலெக்டரிடம் ஒப்படைக்க காத்திருந்த அவர் திடீரென மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றர்.
இதனைப் பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி காப்பாற்றினார் . போலீசாரின் விசாரணையில் அவர் ஆவின் பால் பூத் வைப்பதற்காக வங்கியில் கடன் வங்கியுள்ளதும் அதனை ரத்து செய்யவேண்டுமென்ற காரணத்தால் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.