Categories
தேசிய செய்திகள்

வங்கி கடன் இருக்கிறதா?…. வெளியான அதிர்ச்சி உத்தரவு….!!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதிலும் குறிப்பாக பொருளாதார ரீதியாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு பல நிதி உதவிகளை வழங்கி வருகிறது.

இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலைய காரணம் காட்டி வங்கி கடன் தொகையை செலுத்துவதற்கு வாடிக்கையாளர்களுக்கு புதிய கால அவகாச சலுகையை வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . மேலும் இது குறித்து நீதிபதிகள் இந்த விவகாரத்தில் நாங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்க விரும்பவில்லை. நாங்கள் பொருளாதார நிபுணர்களும் கிடையாது என தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |