Categories
தேசிய செய்திகள்

வங்கி கடன், கிரடிட் கார்டு வாங்கி இருக்கீங்களா…? நீங்க கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் இதுதான்..!!

வங்கி கடன் கிரெடிட் கார்டு மற்றும் கல்வி கடன் வாங்கி இருப்பவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்களை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.

வங்கி கடன் கிரெடிட் கார்டு போன்றவற்றை கடன் வாங்கி இருந்தால் அதில் சிவில் நடைமுறைகளை முக்கியமாக பின்பற்ற வேண்டும்.

எக்காரணத்தைக் கொண்டும் வாடிக்கையாளர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பது ரிசர்வ் வங்கியின் விதிமுறை.

கடன் தவணையை கட்ட தாமதமானால் அதற்கு முறையாக செல்போனில் அழைத்து கேட்கலாம், அல்லது கடிதம் அனுப்பலாம். வீட்டிற்குள் நுழைந்து கடுமையாகப் பேசுவது தண்டனைக்குரியது.

மேலும் அவர்களது வீட்டில் இருப்பவர்களை அவதூறாக பேசினாலும், மிரட்டினாலும் அது ஐபிசி செக்சன் 499 படி குற்றமாகும்.

கடன் தவணையை கேட்டு தொடர்ந்து தொல்லை கொடுத்தால் மேற்கொண்ட பிரிவுகளை குறிப்பிட்டு அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம்.

அதே நேரம் உங்கள் பகுதியில் உள்ள சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த வழக்கு பதிவு செய்யலாம்.

கடன் நிலுவை தொகையை வசூலிக்க வங்கியில் நடைமுறையை மட்டுமே பயன்படுத்தவேண்டும். ஊழியர்களை முகவர்களை கொண்டு மிரட்டுவது கூடாது.

Categories

Tech |