இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அதி தீவிரமாக பரவி வருகிறது. கடந்த வருடம் இருந்த பாதிப்பை விட இந்த வருடம் பாதிப்பு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது . அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் மக்கள் வேலை இழந்து தவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் நாடு பொருளாதார நெருக்கடியில் உள்ளது. கடந்த வருடம் ஏற்பட்ட இழப்புகளை ஈடு செய்வதற்குள் அடுத்த இழப்புகள் உருவாகியுள்ளது.
மக்களுக்கு வருமானம் இல்லாத காரணத்தால் வாங்கிய வங்கிக் கடனை செலுத்த முடியாத நிலையில் உள்ளனர். அதனால் வங்கி கடன் தவணை செலுத்த கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுபோன்ற இக்கட்டான சூழலில் இந்த விவகாரத்தில் தலையிட முடியாது. மனுதாரர் ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை வைக்கலாம் என தெரிவித்துள்ளது.