வங்கியிலிருந்து காணாமல் போன பணத்தை காவல்துறையினர் மீட்டு சம்பந்தப்பட்ட நபரிடம் ஒப்படைத்தனர்.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திண்டிவனம் பகுதியில் இருக்கும் ஊரல் கிராமத்தில் அய்யனாரப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் இருக்கும் ஒரு தனியார் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். அதிலிருந்து கடந்த 2021-ம் ஆண்டு 49,000 ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில் வங்கிக் கணக்கில் இருந்து தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக வேறு ஒருவரின் வங்கி கணக்கு பணம் மாற்றப்பட்டது தெரியவந்தது. இந்நிலையில் காவல்துறையினர் அந்த பணத்தை மீட்டு அய்யனாரப்பன் இடம் ஒப்படைத்தனர்.