Categories
தேசிய செய்திகள்

வங்கி கணக்கில் ரூ.11,677 கோடி வரவு…. 8 மணிநேர கோடீஸ்வரரான நபர்…..!!!!

குஜராத் மாநில அகமதாபாத்தை சேர்ந்த நபர் ஒருவரின் டீமேட் கணக்கில் 11,677கோடி ரூபாய் தவறாக வரவு வைக்கப்பட்ட சம்பவம் அவரை சில மணி நேரங்களுக்கு கோடீஸ்வரராக மாற்றி விட்டது. ரமேஷ் சாகர் என்ற நபர் சுமார் ஐந்து வருடங்களுக்கு மேலாக பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த வருடம் இவர் கோடக் செக்யூரிட்டிசில் டிமார்ட் கணக்கு தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் கடந்த ஜூலை 22 ஆம் தேதி இவரின் வங்கி கணக்கில் திடீரென 11,677 கோடி வரவு வைக்கப்பட்டிருந்ததாக தகவல் வந்தது. ஆனால் அன்று இரவு 8 மணிக்கு வங்கி கணக்கில் இருந்த தொகை திரும்ப பெறப்பட்டு கொல்லப்பட்டது. அதுமட்டுமல்லாமல் அன்றைய நாளில் டி மார்ட் கணக்கு வைத்திருந்த பலருக்கும் இந்த மேஜிக் நடந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.டி மார்ட் கணக்கு என்பது பங்குச்சந்தையில் வணிகம் செய்ய தேவையான ஒரு கணக்கு.ஒருவர் பங்குச்சந்தையில் ஒரு பங்கினை வாங்கினாலும் விட்டாலும் அது இந்த டி மார்ட் கணக்கில் தான் பதிவு செய்யப்படும்.

 

Categories

Tech |