இந்தியாவின் தபால் அலுவலக சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவரும் சேமிப்புக் கணக்கில் 500 ரூபாய் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
இந்தியா தபால் அலுவலகம், சேமிப்பு வங்கியில் குறைந்த பட்ச சேமிப்பு கணக்கை உயர்த்தி உள்ளது. மேலும் குறைந்தபட்ச இருப்பு வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகள் டிசம்பர் 12 முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி தபால் அலுவலக சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் சேமிப்பு கணக்கில் குறைந்தது 500 ரூபாய் வைத்திருக்க வேண்டும்.
இந்த குறைந்தபட்ச தொகையை டிசம்பர் 11 முன்னரே டெபாசிட் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவரும் விரைந்து சென்று தங்களது வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச சேமிப்பு தொகையை விரைவில் செலுத்த வேண்டும்.