இந்தியாவில் அனைத்து வங்கிக் கணக்குகளையும் ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான கால அவகாசம் மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.
வங்கிக் கணக்கு வைத்துள்ள பயனாளர்கள் அனைவரும் வங்கி கணக்குகளை ஆதார் எண்ணுடன் இணைப்பது மிகவும். அதற்கான கால அவகாசம் மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வங்கி கணக்குகளை ஆதார் எண்ணுடன் உடனே இணைத்துக்கொள்ளுங்கள். அவ்வாறு ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் மூலமாக இணைக்க முடியும். அதனை நீங்கள் செய்யவில்லை என்றால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும். உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படும்.
ஆன்லைன் மூலமாக வங்கிக் கணக்கு எவ்வாறு இணைப்பது என்பது பற்றி பார்க்கலாம் வாருங்கள். முதலில் இணைய வங்கிக்குள் நுழைய வேண்டும். அதன் பிறகு ஆதார் எண்ணை இணைக்கும் விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். Sbi வாடிக்கையாளர்களாக இருந்தால் திரையின் இடது பக்கத்தில் www.onlinesbi.com என்பதை கிளிக் செய்து, my account என்பதன் கீழ், link your Aadhaar number என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் உங்கள் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும். நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணின் கடைசி இரண்டு எண்கள் தோன்றும். இணைக்கப்பட்ட நிலை இந்த மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும். அதன் மூலம் நீங்கள் உறுதி செய்து கொள்ளலாம்.