Categories
தேசிய செய்திகள்

வங்கி கணக்கு இருப்பை சரிபார்க்கணுமா?…. ஆதார அட்டை மட்டும் போதும்…. இதோ முழு விபரம்….!!!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வழங்கிய 12 இலக்கஎண், கைரேகைகள் மற்றும் கருவிழி ஸ்கேன் ஆகிய உங்களின் பயோ மெட்ரிக் தகவலுடன் இணைக்கப்பட்டுள்ளது. தற்போது ஆதார் அட்டையைப் பயன்படுத்தி உங்களது வங்கி இருப்பைச் சரிபார்க்கலாம். இந்த இணைப்பு இந்திய குடிமக்கள் தங்களது ஆதார் எண்களுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளிலுள்ள இருப்பை ஆன்லைனில் சரிபார்க்க உதவுகிறது. இதன் வாயிலாக நீங்கள் நேரடியாக வங்கிக்கு செல்வதிலுள்ள சிரமத்தை நீக்குகிறது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) உங்களது தொலைபேசி எண்ணை ஆதாருடன் இணைப்பது, பிற தகவல்களைப் புதுப்பிப்பது ஆகிய சேவைகளை அவர்களின் வீட்டில் இருந்தபடியே வழங்குகிறது. ஆதார்அட்டையைப் பயன்படுத்தி உங்களது கணக்கு இருப்பைச் சரிபார்க்க உதவும் படிப்படியான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

# உங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து *99*99*1# ஐ டயல் செய்ய வேண்டும்

# உங்களின் 12 இலக்க ஆதார்எண்ணை உள்ளிட வேண்டும்

# உங்கள் ஆதார் எண்ணை மீண்டுமாக உள்ளிட்டு உறுதிப்படுத்த வேண்டும்.

# வங்கி இருப்பு உங்களது திரையில் பிளாஷ் செய்தியாக காட்டப்படும்.

# பிளாஷ் எஸ்.எம்.எஸ் UIDAI வாயிலாகவே அனுப்பப்படும்.

Categories

Tech |