Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“வங்கி கணக்கு புத்தகம் வழங்காத விவகாரம்” வங்கிக்கு ரூ.70 ஆயிரம் அபராதம்…. அதிரடி உத்தரவு…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா நகரில் ஓய்வு பெற்ற அரசு ஊழியரான குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2016- ஆம் ஆண்டு மதுராந்தகத்தில் இருக்கும் கனரா வங்கியில் குமரேசன் சேமிப்பு கணக்கு தொடங்குவதற்காக விண்ணப்ப படிவம் கொடுத்து ஆயிரம் ரூபாயை செலுத்தியுள்ளார். மேலும் அந்த படிவத்தில் ஏ.டி எம் கார்டு வேண்டும் என குமரேசன் குறிப்பிட்டுள்ளார். அதன்படி அவரது வீட்டிற்கு ஏ.டி.எம் கார்டு மட்டுமே வந்தது. வங்கி கணக்கு புத்தகத்தை அவர்கள் அனுப்பவில்லை.

இதுகுறித்து பலமுறை வங்கியில் சென்று கேட்டும் அவர்கள் சரியாக பதில் அளிக்கவில்லை. சுமார் 9 மாதங்கள் ஆகியையும் வங்கி கணக்கு புத்தகம் வழங்காததால் மன உளைச்சலில் இருந்த குமரேசன் செங்கல்பட்டு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை அடுத்து வங்கி கணக்கு புத்தகம் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டபோதும் வங்கியில் இருந்து உரிய பதில் அளிக்காததால் குமரேசன் டெல்லியில் இருக்கும் மத்திய தகவல் ஆணையத்திடம் வங்கி புத்தகம் குறித்து கேட்டுள்ளார்.

பின்னர் மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவின்படி குமரேசனுக்கு விபரங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கினை விசாரித்த மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற தலைவர் காசி பாண்டியன், உறுப்பினர் ஜவகர் ஆகியோர் ஏ.டி எம் பராமரிப்பு கட்டணம் 260 ரூபாய், சர்வீஸ் கட்டணம் 386 ரூபாயை சம்பந்தப்பட்ட வங்கி நுகர்வோருக்கு திருப்பி கொடுக்க வேண்டும். மேலும் அவருக்கு 50 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு மற்றும் நீதிமன்ற செலவு தொகை 20 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 70 ஆயிரம் ரூபாயை வங்கி அபராதமாக வழங்க வேண்டும் என அதிரடியாக உத்தரவு பிறப்பித்தனர்.

Categories

Tech |