Categories
தேசிய செய்திகள் பல்சுவை

வங்கி கணக்கு பேலன்ஸை…. வாட்ஸ்அப்பில் ஈஸியா பார்க்கலாம்…. எப்படினு தெரிஞ்சிக்கோங்க…!!!!

வாட்ஸ்அப் மூலமாக மெசேஜ், போட்டோக்கள், வீடியோக்கள் உள்ளிட்டவற்றை மட்டும் பகிர்ந்து கொள்வது மட்டுமல்லாமல் வாட்ஸ் அப் மூலம் பணம் அனுப்புவதற்கான சேவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக வாட்ஸப்பில் வங்கி கணக்கு பேலன்ஸ் தொகையை எளிதில் தெரிந்து கொள்ளலாம். UPI அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த செயலி மூலம் பணம் அனுப்புவது மட்டுமல்லாமல் வங்கி கணக்கில் உள்ள பேலன்ஸ் தொகையும் தெரிந்துகொள்ளலாம்.

இதற்கு முதலில் உங்கள் வாட்ஸாப்பில் மேற்பகுதியில் வலப்பக்கம் உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்யவும்.. அதில் உள்ள Payments பகுதியை கிளிக் செய்யவும். உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை பதிவிட்டு சரிபார்த்துக்கொள்ளவும். உங்கள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணும், வாட்ஸாப் எண்ணும் ஒரே எண்ணாக இருத்தல் வேண்டும். இப்போது வாட்ஸாப் பரிவர்த்தன சேவையுடன் உங்கள் வங்கிக் கணக்கு இணைக்கப்பட்டுவிடும். இப்போது Payments பிரிவில் உங்கள் வங்கிக் கணக்கை தேர்வு செய்து View Account Balance ஆப்ஷனை கிளிக் செய்யவும். உங்கள் UPI PIN எண் டைப் செய்தால் உங்கள் பேங்க் பேலன்ஸ் தொகை தெரிந்துவிடும்.

Categories

Tech |