பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் கூடாது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர் விரோதப் போக்கை திரும்பப் பெற வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும், மின்சார திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் 2 நாட்கள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
அந்த வகையில் நேற்றும் (மார்ச்.28), இன்றும் (மார்ச்.29) பொது வேலைநிறுத்தம் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் நடைபெறுகிறது. இந்தப் போராட்டத்தினால் 2 நாட்கள் போக்குவரத்து, வங்கி மற்றும் ஏ.டி.எம் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக பல பகுதிகளில் ஏடிஎம்களில் பணம் இல்லாததால் மக்கள் சிரமத்தை சந்திக்கின்றனர்.