வங்கி மோசடி காரணமாக இந்தியாவிற்கு தினசரி 100 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த சில காலமாக வங்கி மோசடிகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகின்றது. வாங்கி மோசடிகளால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இது குறித்து ரிசர்வ் வங்கி முக்கிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்துள்ளதாவது ஒவ்வொரு நாளும் வங்கி மோசடிகளால் இந்தியாவிற்கு குறைந்தபட்சம் 100 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதன்படி கடந்த 7 ஆண்டுகளாக வங்கி மோசடிகள், ஊழல் மூலம் தினசரி குறைந்தபட்சம் 100 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகின்றது.
அதிக பணத்தை இழந்த மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தை பிடித்துள்ளது. ஒட்டுமொத்த வங்கி மோசடி பணத்தில் மகாராஷ்டிரா மற்றும் 50 சதவீதம் பணத்தை இழந்துள்ளது. அடுத்த இடங்களில் டெல்லி, தெலுங்கானா, குஜராத், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் உள்ளன. கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் கடந்த டிசம்பர் மாதம் வரை வங்கி மோசடிகளால் மொத்தம் 2.5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
அதன்படி,
2015-16ஆம் ஆண்டில் 67,760 கோடி ரூபாய்,
2016-17ஆம் ஆண்டில் 59,966.4 கோடி ரூபாய்
2017 முதல் 2019 வரை மொத்தமாக 45000 கோடி ரூபாய் இழப்பு
2019-20ஆம் ஆண்டில் 27,698.4 கோடி ரூபாய் ,
2020-21ஆம் ஆண்டில் 10,699.9 கோடி ரூபாய் இழப்பு.
நடப்பு நிதி ஆண்டின் முதல் 9 மாதங்களில் 647.9 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.