Categories
தேசிய செய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. இனி இதெல்லாம் ரொம்ப ஈஸி…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்கள் சுலபமான முறையில் ஒரு நிதி நிறுவனத்தில் இருந்து மற்ற ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட நிறுவனங்களுக்கு தகவல்களை டிஜிட்டல் முறையில் அணுகும் நோக்கத்திலும் எளிதில் பகிர்ந்து கொள்வதற்கும் ஆன்- போர்டு அக்கவுண்ட் அக்ரிகேட்டர் தளத்தை புதிதாக கொண்டு வந்துள்ளது. இதன் பணிகள் என்னவென்றால், வங்கி வாடிக்கையாளரின் ஒப்புதலின் மூலமாக டிஜிட்டல் முறையில் பெறப்பட்ட தரவை பயன்படுத்த வங்கிகளுக்கு AA அமைப்பு உதவியாக இருக்கும்.

வாடிக்கையாளரால் பிற நிதி பயன்பாடுகளுக்கு தேவையான ஆவணங்களை வழங்குவதற்கான தேவையை எளிதில் பூர்த்தி செய்யும். அக்கவுண்ட் அக்ரிகேட்டர் என்பது ரிசர்வ் வங்கியின் ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு வகை நெட்வொர்க் ஆகும். இது ஒரு தனிநபரின் தரவுகளை பாதுகாப்பாகவும் டிஜிட்டல் முறையிலும் அணுகவும்,அவர்கள் கணக்கு வைத்திருக்கும் ஒரு நிதி நிறுவனத்தில் இருந்து தகவல்களை பகிர்ந்து கொள்ளவும் உதவுகின்றது.

இதற்கு முன்பாக இந்த புதிய முறையை கடந்த ஆண்டு மே மாதம் முதல் யூனியன் வங்கி தொடங்கி பயன்படுத்தி வருகிறது. அக்கவுண்ட் அக்ரிகேட்டட் இகோ சிஸ்டம் கடந்த ஆண்டு நேரலைக்கு வந்தது.மேலும் இது தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் செயலில் பங்கேற்பதை பார்க்க உதவுகின்றது. அதுமட்டுமல்லாமல் பிஎன்பி வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு வெறும் 4 கிளிகில் முன் அங்கீகரிக்கப்பட்ட தனிநபர் கடன்களை விரைவில் அறிமுகப்படுத்தப் போவதாகவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இது வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |