Categories
தேசிய செய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு…. டிசம்பர் 1 முதல் எக்ஸ்ட்ரா பணம் கட்டணும்….!!!!

எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்கள் அனைவரும் மேற்கொள்ளும் கிரெடிட் கார்டு இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு பிராசஸிங் கட்டணம் மற்றும் வரி வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. அதன்படி கிரெடிட் கார்டு இஎம்ஐ கட்டணங்களுக்கு ரூ.99 பிராசஸிங் கட்டணமும், வரியும் சேர்த்து வசூலிக்கப்படும் என எஸ்பிஐ கார்டு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டணம் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

மேலும் நேரடியாக வாடிக்கையாளர்கள் ஷாப்பிங் செய்யும்போது அமேசான் மற்றும் பிளிப்கார்டு போன்ற வர்த்தக இணையதளங்களிலும் பொருட்களை வாங்கிவிட்டு கிரெடிட் கார்டு பயன்படுத்தி கட்டணம் செலுத்தி இருந்தால், இஎம்ஐ கட்டணங்களுக்கு பிராசஸிங் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |