Categories
தேசிய செய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்…. கட்டண விதிகளில் திடீர் மாற்றம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

 

நாட்டில் உள்ள அனைத்து வங்கிகள் மற்றும் நிதி அமைப்புகளின் செயல்பாடுகள் அனைத்தையும் ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. தொடர்ந்து ரிசர்வ் வங்கி 2021 ஆம் ஆண்டு பல புதிய அறிவிப்புகளை கொண்டுவந்தது. அதன்படி ஒருவர் 5 முறைக்கு மேல் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் பரிவர்த்தனை மேற்கொண்டால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் மெட்ரோ நகரங்களில் 3 முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க முடியும்.

அதனை தொடர்ந்து ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கு விவரங்களை பாதுகாக்கும் வகையில் வணிக நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் தரவுகளை சேமிக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இத்தகைய மாற்றங்களை தொடர்ந்து நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு கட்டணங்களை உயர்த்தியுள்ளது. உயர்த்தப்பட்ட கட்டணத்தின் படி கட்டணமாக 2.50% செலுத்த வேண்டியிருக்கும். இது குறைந்தபட்சம் 500 ரூபாயாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிஐசிஐ வங்கியின் எமரால்டு கார்டினை தவிர மற்ற அனைத்து கார்டுகளுக்கும் தாமதமாக செலுத்தும் தவணைக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தவணை தொகை 100 ரூபாயாக இருந்தால் கட்டணம் கிடையாது. அதை தாண்டும் போது கட்டணம் வசூலிக்கப்படும். இதனால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி உள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கூடுதல் கட்டணத்துடன் வாடிக்கையாளர்கள் ஜிஎஸ்டியும் செலுத்த வேண்டும். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கிரெடிட் கார்டு கட்டண உயர்வானது வரும் பிப்ரவரி மாதம் 10ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.

Categories

Tech |