பொதுத்துறை வங்கியான UCO வங்கி சேமிப்பு திட்டத்துக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி இருக்கிறது.
இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படிருந்தது. இதனால் பல்வேறு தொழில் துறைகளும் பாதிப்படைந்து நஷ்டத்தை ஏற்படுத்தியது. அதன் காரணமாக பொதுமக்கள் பொருளாதார ரீதியான நிதி நெருக்கடியைச் சந்தித்து வந்தனர். அதனால் தங்களின் பணத்தை பாதுகாப்பான முறையில் சேமிக்க தொடங்கினர்.அதிலும் குறிப்பாக வங்கிகளில் உள்ள சேமிப்பு திட்டத்தில் சேமிக்க தொடங்கி வந்தனர்.
இந்நிலையில் தற்போது பெரும்பாலான வங்கிகளில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக UCO வங்கிகளில் உள்ள சேமிப்பு கணக்குகள் மற்றும் பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி உயர்வால் சீனியர் சிட்டிசன்கள் பெரிதும் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது. ஏனெனில் சேமிப்புக் கணக்குகளை விட சீனியர் சிட்டிசன்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டிருக்கிறது.
அதாவது சேமிப்பு கணக்குகளில் ரூ.10 லட்சம் வரை டெபாசிட் செய்தால் 2.60% வட்டியும் அதற்கும் மேற்பட்ட டெபாசிட்களுக்கு 2.75% வட்டியும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் யூகோ வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ரூ.2 கோடி வரையிலான முதலீடுகளுக்கு வட்டி விகிதம் 6.60% உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக 6.40% வட்டி விகிதம் வழங்கப்பட்டது. இதில் 3 முதல் 5 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதம் 6.55% இருந்து 6.80% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஆனால் இதில் 1 ஆண்டுக்கு உட்பட்ட டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லை. இந்த வட்டி விகிதங்களை இன்று முதல் அமல்படுத்த உள்ளதாக UCO வங்கி நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.