இம்மாதம் அதிக விடுமுறை உள்ளதால் தனியார் மற்றும் பொது வங்கிகளின் வாடிக்கையாளர்கள் முன்னதாகவே திட்டமிட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட பட்டியலின் படி, ஜூலை மாதத்தில் வங்கிகள் 14 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும். இதில், 7வார இறுதி விடுமுறைகள் Negotiable Instruments Actன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன. மீதமுள்ளநாட்கள் அந்தந்த மாநிலங்களுக்கான விசேஷ நாள் விடுமுறை தினங்களாகும்.
ஜூலை 1: காங் (ரதஜாத்ரா)/ ரத யாத்திரை – புவனேஷ்வர்
ஜூலை 3: முதல் ஞாயிறு
ஜூலை 7: கர்ச்சி பூஜை – அகர்தலா
ஜூலை 9: இத்-உல்-அதா (பக்ரித்) – கொச்சி, திருவனந்தபுரம்,இரண்டாவது சனிக்கிழமை
ஜூலை 10 பக்ரித் பண்டிகை
ஜூலை 11: ஈத்-உல்-அஷா – ஸ்ரீநகர், ஜம்மு
ஜூலை 13: பானு ஜெயந்தி – கேங்டாக்
ஜூலை 14: Beh Dienkhlam – ஷில்லாங்
ஜூலை 16: ஹரேலா – டேராடூன்
ஜூலை 17: மூன்றாவது ஞாயிறு
ஜூலை 23: நான்காவது சனிக்கிழமை
ஜூலை 24: நான்காவது ஞாயிறு
ஜூலை 26: கேர் பூஜை – அகர்தலா
ஜூலை 31: ஐந்தாவது ஞாயிறு