Categories
தேசிய செய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களே… இனி ஏடிஎம்மில் இதற்கு கட்டணம்… உஷாரா இருங்க…!!!

இனிமேல் ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது உங்கள் கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை தெரிந்துகொண்டு பணம் எடுப்பது மிகவும் நல்லது.
சில பல வருடங்களுக்கு முன்பு வரை மாத சம்பளம் முதல் நாள் சம்பளம் வரை அனைவரும் மொத்தமாக கைகளில் கிடைக்கும். சிறிது தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பின் இணைய பயன்பாடு, வங்கிகள் அதிகரிப்புக்கு பின் தற்போதைய காலத்தில் வருமானம் அனைத்தும் வங்கிகள் மூலமே பெறப்படுகின்றன. அதிலும் ஏ.டி.எம் வசதிக்கு பின் கையில் பணம் வைத்திருப்பதே இல்லை முழுமையாக வங்கிகளிலே உள்ளது. தற்போது மேலும் வளர்ச்சியடைந்து பணமில்லா பரிவர்த்தனை நிலைக்கு வந்துவிட்டோம். வங்கி பயன்பாடு இல்லாமல் எதுவுமே செய்ய முடியாத நிலைக்கு நாம் அனைவரும் மாறிவிட்டோம் என்பதே மாற்ற முடியாத உண்மை.

இனி வரும் காலங்களில் சேமிப்புக் கணக்கில் மினிமம் பேலன்ஸை வைத்திருப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமாக இருக்க போவதில்லை. ஏடிஎமில் உங்கள் வங்கி ‘போதிய நிதி’ இல்லை என்று செய்தி அனுப்பும்போது வாடிக்கையாளர்களிடமிருந்து அதற்கான பணத்தை வசூலிக்கிறது. எனவே, ஏடிஎம் பரிவர்த்தனைக்கு முன்னர் நிலுவைத் தொகையைச் சரிபார்க்க வேண்டியது அவசியம். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ), ஐசிஐசிஐ வங்கி, எச்.டி.எஃப்.சி வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கி, யெஸ் வங்கி மற்றும் பிற வங்கிகள் உங்கள் கணக்கில் போதுமான இருப்பு இல்லாததால் தோல்வியுற்ற ஏடிஎம் பரிவர்த்தனைக்கு கட்டணத்தை வசூலிக்கின்றன.

மேலும் போதிய நிதி (Insufficient balance ) இல்லாததால் எஸ்பிஐ 20 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கிறது . எச்.டி.எஃப்.சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கி, யெஸ் பேங்க், ஆக்சிஸ் போன்றவை போதிய நிதி இருப்பு இல்லாததால் ஒரு பரிவர்த்தனைக்கு  25 ரூபாய்  கட்டணம் வசூலிக்கிறது. இனிமேல் ஏ.டி.எம்மில் பணம் எடுக்க செல்லும் முன் வங்கி கணக்கில் இருப்பு இருக்கிறதா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு பணம் எடுக்க வேண்டும் இல்லையெனில் எடுக்காத பணத்திற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

Categories

Tech |