ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு பொது விடுமுறைகள் அறிவிக்கப்படுவது வழக்கம். விடுமுறை குறித்த அறிவிப்பை வங்கி வாடிக்கையாளர்கள் முன்னரே அறிந்து கொள்ளும் வகையில் ரிசர்வ் வங்கி ஒவ்வொரு மாதமும் வங்கி விடுமுறை குறித்த பட்டியலை வெளியிட்டு வருகிறது.அவ்வகையில் வருகின்ற அக்டோபர் மாதம் வங்கிகளுக்கான விடுமுறை குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி அக்டோபர் மாதத்தில் மட்டும் பத்து நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த பத்து நாட்களும் வங்கிகள் இயங்காது என்பதால் வங்கி வாடிக்கையாளர்கள் முன்னரே திட்டமிட்டு தங்கள் வங்கி தொடர்பான வேலைகளை முடித்துக் கொள்வது நல்லது.
அக்டோபர்-4 தசரா பண்டிகை (செவ்வாய்)
அக்டோபர் 8 இரண்டாம் சனிக்கிழமை
அக்டோபர் 9 ஞாயிற்றுக்கிழமை
அக்டோபர் 16 ஞாயிற்றுக்கிழமை
அக்டோபர் 22 நான்காவது சனிக்கிழமை
அக்டோபர் 24 தீபாவளி பண்டிகை (திங்கள்)
அக்டோபர் 25 தீபாவளி பண்டிகை (செவ்வாய்)
அக்டோபர் 30 ஞாயிற்றுக்கிழமை