Categories
தேசிய செய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களே…. இதை மட்டும் செய்யவே கூடாது…. அரசு போட்ட திடீர் உத்தரவு….!!!!

இந்தியாவில் தற்போது பண மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மூலமாக பலரும் பணத்தை திருடுகின்றனர். வங்கி மற்றும் பண மோசடிகள் தொடர்பாக வங்கிகள் தரப்பில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகின்றது. இருந்தாலும் மோசடிகள் குறைந்தபாடில்லை. இந்த நிலையில் ஆன்லைன் பண மோசடி குறித்து மத்திய அரசின் கீழ் செயல்படும் PIB அமைப்பு புதிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளர்கள் தங்களது போனுக்கு வரும் எஸ்எம்எஸ் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளர்களுக்கு மோசடிகாரர்களிடமிருந்து அதிக அளவில் எஸ்எம்எஸ் வருவதாகவும், அதில் வாடிக்கையாளரின் கணக்கில் திடீரென முடக்கப்பட்டு விட்டது,அதனை மீண்டும் ஆக்டிவேட் செய்வதற்கு வங்கிக் கணக்கு விவரங்கள் அனைத்தையும் வழங்க வேண்டும் என கேட்கப்பட்டுள்ளது.

ஆனால் இது போலியான எஸ்எம்எஸ் என்று கண்டறியப்பட்டது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் வங்கியிலிருந்து எஸ்எம்எஸ் அனுப்புவது போல அனுப்பி, வாடிக்கையாளர்களை சுலபமாக ஏமாற்றி பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து விட்டன. எனவே இதுபோன்ற குறுஞ்செய்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மோசடி கண்டறியப்பட்டால் வாடிக்கையாளர்கள் [email protected] என்ற முகவரியில் புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகளில் வாடிக்கையாளர்கள் இது போன்ற மோசடிகளில் சுலபமாக சிக்கி விடுகின்றனர். அதனால் இந்தியாவில் வங்கி மோசடிகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே வாடிக்கையாளர்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |