இன்றைய காலகட்டத்தில் அனைவரிடமும் வங்கிக்கணக்கு கட்டாயம் இருக்கும். அப்படி வங்கி கணக்கில் இருக்கும் பேலன்ஸ் எவ்வளவு உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெறுவதற்கு நிறைய வழிகள் தற்போது உள்ளன. அதனை ஆன்லைன் மூலமாக, மொபைல் ஆப், ஏடிஎம் மெஷின், ஐடிஆர் கால் மூலமாக தெரிந்து கொள்வதற்கு நிறைய வழிகள் உள்ளது. இருந்தாலும் மிக எளிதாக பார்ப்பதற்கு எஸ்எம்எஸ் வசதி வாடிக்கையாளர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். அதன்படி ஆக்சிஸ் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கில் இருக்கும் இருப்புத் தொகை எவ்வளவு என்று எளிதாக தெரிந்து கொள்வதற்கு BAL என்று டைப் செய்து +918691000002 என்ற நம்பருக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். அதனைப் போலவே 56161600 என்ற எண்ணுக்கும் அனுப்பலாம்.
அதேபோல மினி ஸ்டேட்மென்ட் எடுப்பதற்கு MINI என்று டைப் செய்து மேலே குறிப்பிட்டுள்ள எங்களுக்கு நீங்கள் அனுப்பலாம்.
ஈமெயில் மூலம் e-statement எடுப்பதற்கு ESTMT என்று டைப் செய்து அனுப்ப வேண்டும்.
ஆக்ஸிஸ் வங்கி உடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பரை அப்டேட் செய்ய UPDATEM என்று டைப் செய்து மேலே குறிப்பிட்டுள்ள நம்பருக்கு அனுப்பலாம்.
இதனைத் தவிர ஆக்ஸிஸ் வங்கியின் சில முக்கியமான கீ வேர்டுகள் வாடிக்கையாளர்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளன.
ஏடிஎம் கார்டு பிளாக் -BLOCKCARD
கிரெடிட் கார்டு பேலன்ஸ் – CARDBAL
கிரெடிட் கார்டு ஆக்டிவேட் – ACA
இவ்வாறு SMS மூலமாக நீங்கள் தகவல் பெறுவதற்கு 3 ரூபாய் வரை சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும்.