Categories
தேசிய செய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களே….. இன்றே(ஆகஸ்ட் 31) கடைசி நாள்…. உங்க வங்கி கணக்குக்கு ஆபத்து… உடனே வேலையை முடிங்க…..!!!!!

பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்கள் அனைவரும் வருகின்ற ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் KYC முடித்திருக்க வேண்டும் என அறிவித்துள்ளது.அப்படி செய்யாவிட்டால் வங்கி கணக்கு முழக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.ரிசர்வ் வங்கியின் விதிமுறைப்படி இந்தியாவில் உள்ள அனைத்து வங்கி வாடிக்கையாளர்களும் மார்ச் 31ஆம் தேதிக்குள் KYC  முடித்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் அதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதனால் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் கேஒய்சி முடித்திருக்க வேண்டும். அப்படி முடிக்காவிட்டால் பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு முடக்கப்படும் எனவும் வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்க முடியாது எனவும் இதர முக்கிய வங்கி சேவைகளையும் பயன்படுத்த முடியாது என பஞ்சாப் நேஷனல் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே வங்கி வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள வங்கி கிளைக்கு சென்று கேஒய்சி அப்டேட்டை ஈசியாக முடித்து விடலாம். அது மட்டுமல்லாமல் ஆன்லைன் மூலமாகவும் வேலையை முடிக்கலாம்.மேலும் சில ஆன்லைன் மோசடி கும்பல்கள் வாடிக்கையாளர்களிடம் கேஒய்சி முடித்து தருவதாக கூறி ஆதார் மற்றும் பான் கார்டு விவரங்களை கேட்டு வருவதால் அவர்களிடம் இந்த தகவல்களை பகிராமல் இருப்பது மிகவும் அவசியம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |