Categories
தேசிய செய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களே உஷாரா இருங்க….. இனி யாரும் இதை நம்பாதீங்க…. திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!! N

இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே பல ஆன்லைன் மோசடி சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன . தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு நாளுக்கு நாள் பண மோசடி சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.அதிலும் குறிப்பாக வங்கி வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருட்டு சம்பவங்கள் அதிகமாக நடைபெறுகின்றன.வங்கியிலிருந்து அழைப்பது போல அழைத்து ஓடிபி போன்ற வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்களை கேட்டு வங்கி கணக்கில் இருந்து பணம் முழுவதையும் திருடி விடுகிறார்கள்.

அது மட்டுமல்லாமல் எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும் அதிகம் ஏமாற்றப்படுகிறார்கள்.நிலையில் இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றன.இருந்தாலும் வாடிக்கையாளர்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லாததால் மோசடிகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

இந்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி அணை எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் ஒருமுறை எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது ராங் நம்பர் விஷயத்தில் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.தவறான அழைப்புகள் ஏதாவது வந்தால் அதற்கு பதில் அளிக்க வேண்டாம் என்றும் அது தொடர்பான எஸ்எம்எஸ் போன்றவற்றில் உள்ள லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.

மேலும் உங்களின் வங்கிக் கணக்கில் ஒரு லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும் அதனை எடுக்க வேண்டும் என்றால் இந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டும் என மோசடி செய்ய முயற்சித்து வருகிறார்கள் . அதனைப் போலவே மொபைல் நம்பருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளதாகவும் கோரி மோசடி செய்து வருவதால் வாடிக்கையாளர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |