Categories
மாநில செய்திகள்

வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே ஆம்னி பேருந்து…. அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் சொல்ல வருவது என்ன….?

தமிழகத்தில் அரசு பேருந்துகளுக்கு இணையாக தனியார் பேருந்துகளும் இயங்கிக்கொண்டு வருகிறது. இதனால் இரு பேருந்து சேவைகளிலும் கட்டணங்கள் ஏற்ற இறக்கமாக நிர்ணயிக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் அரசு பேருந்துகளை விட தனியார் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படுவதால் நேரம் செலவாகுதை தடுக்க மக்கள் அதிகம் தனியார் பேருந்துகளையே விரும்புகின்றார்கள். இதனால் தனியாள் பேருந்துகள் அவர்களாகவே கட்டணங்கள் நிர்ணயித்து, பண்டிகை காலங்களில் கட்டணங்களை உயர்த்தி வசூலித்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து பண்டிகை மற்றும் விசேஷ நாட்களை மையமாகக் கொண்ட ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தனியார் நிறுவனங்கள் மக்களின் தேவைகளை புரிந்து கொண்டு அதிக கட்டணங்களை வசூலிப்பதை வழக்கமாக கொண்டுள்ளது. அதாவது ஆம்னி பேருந்துகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்ய உரிமை மாநில அரசுகளுக்கு இல்லாததால் இத்தகைய ஆம்னி பேருந்துக்கள் அதிக கட்டணத்தை வருகின்றது.

இந்நிலையில் ஆயுத பூஜை முன்னிட்டு ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இது குறித்து சென்னை எழிலகத்தில் உள்ள போக்குத்துறை ஆணையர் அலுவலகத்தில் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் அமைச்சர் பேச்சு வார்த்தை நடத்தினார். அதன் பிறகு அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் பேசியது, ஆம்னி பேருந்து கட்டண உயர்வு ஏழை எளிய மக்களை பாதிப்பது இல்லை. அரசு பேருந்துகளில் பயணிக்காதவர்கள் ஆம்னி பேருந்து கட்டணத்தை தெரிந்து கொண்டே முன்பதிவு செய்கிறார்கள். ஆம்னி பேருந்துகள் சேவையின் அடிப்படையில் இயங்க முடியாது. அவர்களுக்கு ஒரு தொழில் செய்கிறார்கள். ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பாதிப்பு வராத வகையில் தான் கட்டணம் நிர்ணயம் செய்து விரைவில் அறிவிப்பார்கள். மேலும் பல்வேறு விதமான பேருந்துக்களும் வெவ்வேறு கட்டண நிர்ணயிக்க வேண்டியிருப்பதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூறுகின்றனர். கட்டணத்தை குறைக்க அறிவுறுத்தப்பட்டதால் ஒரிரு நாட்களில் ஆம்னி பேருந்து கட்டண உரிமையாளர் விவரத்தை அறிவிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |