Categories
சினிமா தமிழ் சினிமா

வசந்தபாலன்- அர்ஜுன் தாஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது?… வெளியான செம மாஸ் அறிவிப்பு…!!!

வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் வெயில், அங்காடித்தெரு, அரவான், காவியத்தலைவன் போன்ற படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தவர் வசந்தபாலன். இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயில் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். தற்போது இயக்குனர் வசந்தபாலன் பிரபல நடிகர் அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சார்பட்டா பரம்பரை பட நடிகை துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார்.

மேலும் பரணி, சிங்கம் புலி, பிக்பாஸ் பிரபலம் சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை வசந்தபாலன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். இந்நிலையில் வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Categories

Tech |