Categories
சினிமா

வசந்தபாலன் இயக்கியுள்ள படப்பிடிப்பு நிறைவடைந்தது…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

கைதி, மாஸ்டர் திரைப்படங்களில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்தவர் அர்ஜூன்தாஸ். இவர் அநீதி எனும் திரைப்படத்தில் முதல் முறையாக கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் மாரியம்மாவாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த துஷாரா விஜயன் இத்திரைப்படத்தில் கதையின் நாயகியாக நடித்து இருக்கிறார். இந்த படத்தை வெயில், அங்காடித்தெரு, அரவான், காவியத்தலைவன், ஜெயில் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய வசந்தபாலன் இயக்கி உள்ளார்.
இவற்றில் வனிதா விஜயகுமார், “நாடோடிகள்” பரணி, பிக் பாஸ் புகழ் சுரேஷ் சக்கரவர்த்தி, “அறந்தாங்கி” நிஷா, காளி வெங்கட், உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். இத்திரைப்படத்தை பள்ளி நண்பர்களுடன் இணைந்து வசந்தபாலன் அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் வாயிலாக தயாரித்து இருக்கிறார்.
இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். அதன்பின் பாடல்களை கார்த்திக் நேத்தா, ஏகாதேசி எழுதி உள்ளனர். கவிஞர் நா.முத்துக்குமாரின் நட்பின் நினைவாக அவருடைய கவிதைகளில் இருந்து வரிகளைத் தொகுத்து ஒரு திரைப்பாடலுக்கு பயன்படுத்தி இருக்கிறார். மும்முரமாக நடைப்பெற்று வந்த அநீதி படத்தின் படப்பிடிப்பு இப்போது முடிவடைந்துள்ளது. இதனை அதிகாரப்புர்வமாக படக்குழு அறிவித்திருக்கிறது.

Categories

Tech |