வசந்தபாலன் புதிதாக இயக்கி வரும் படத்தில் நடிகை வனிதா இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் வசந்தபாலன் வெயில் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் அங்காடித்தெரு, அரவான், காவியத்தலைவன் போன்ற படங்களை இயக்கியிருந்தார். மேலும் இவர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயில் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. தற்போது இயக்குனர் வசந்தபாலன் நடிகர் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.
#VasanthaBalansNext #UrbanBoyzProductionNo1
Here we are! Introducing the energy boosters of our film to you all… @vanithavijayku1 & @arjunchdmbrm are coming along with us to entertain you!@Vasantabalan1 @iam_arjundas @gvprakash @officialdushara @onlynikil pic.twitter.com/2fM9ckHFlq
— Urban Boyz Studios (@UBoyzStudios) August 8, 2021
இந்த படத்தில் சார்பட்டா பரம்பரை பட நடிகை துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் வனிதா விஜயகுமார் மற்றும் அர்ஜுன் சிதம்பரம் இருவரும் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .