தமிழகத்தில் இந்த வருடத்தின் தொடக்கத்தில் குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு,கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி முதலில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
ஆனாலும் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன் பலனாக நேற்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்தது. மேலும் தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் முதல்வர் ஸ்டாலின் கொரொனா பொது நிவாரண நிதியைத் திரட்டி வருகிறார். அவருக்கு பலரும் நிதி வழங்கி வருகிறார்கள்.
இந்நிலையில் கொரோனா மீட்பு பணிக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வசந்த் & கோ சார்பில் ரூபாய் 25 லட்சம் நிவாரண நிதி தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சந்திப்பின்போது வசந்த் & கோ நிர்வாக இயக்குனர்கள் வினோத் குமார் மற்றும் தங்க மலர் ஜெகன்நாத் ஆகியோர் உடனிருந்தனர்.