முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின் வீடு, அலுவலகம் உட்பட அவருக்கு சொந்தமான 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அவருடைய சொத்து மதிப்பு மற்றும் அவருடைய பினாமியின் பெயரில் இருக்கும் சொத்து மதிப்பு என அனைத்து ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஆராய்ந்து வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் உறவினரான சேலத்தை சேர்ந்த சஞ்சய் என்பவருக்கு சொந்தமான ஏ.வி.ஆர் சொர்ண மஹாலில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சுமார் 8 மணி நேரமாக அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். காலை 7 மணிக்கு தொடங்கி தற்போது வரை நடைபெற்று வரும் இந்த சோதனையில் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக ஆறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமல்லாமல் ரொக்கப் பணமும் கைப்பற்ற படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Categories