Categories
அரசியல் மாநில செய்திகள்

வசமாக சிக்கிய ஓபிஎஸ் மகன் …! திமுகவுடன் தொடர்பு உண்மையா ? ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி …!!

இன்று அதிமுக தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  ஓபிஎஸ் நம்பிக்கையின் அடையாளம்,  விசுவாசத்தின் அடையாளம் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார். இதய தெய்வம், புரட்சி தலைவி அம்மா அவர்களின் மறைவுக்கு பின்பு தொடர்ச்சியாக நடந்த விஷயங்களை பாருங்கள். அவருடைய மகன் ரவீந்தரநாத் போயி முதலமைச்சரை சந்தித்து விட்டு,

அர்ப்பணிப்பு உணர்வோடு செயல் படுகிறார் என்றால் எந்த ஒரு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களும் ஏற்றுக் கொள்வார்களா ? சொல்லுங்கள். இன்னும் நிறைய உதாரணங்கள் சொல்ல முடியும்.அம்மா இருந்தபோது,  அம்மாவுக்குப் பிறகு என்ன நடந்தது ?அதன் பிறகு பாருங்க. நிறைய காரணங்கள் இருக்கு உதயகுமார் பேட்டி எடுத்து பாருங்க.

ஓபிஎஸ் பொருளாளர் பதவியில் நீடிப்பாரா ? மாட்டாரா  என்பதற்கெல்லாம் பொதுக்குழுவில் விடை கிடைக்கும். ஓபிஎஸ் ஆதரவாளர்களை கட்டாயப்படுத்தி அழைக்கிறீர்கள் என்ற குற்றச்சாட்டுக்கு….. அப்படி யாரும் அழைக்கவில்லை. அவர்கள் எல்லாம் சின்ன குழந்தைகளா ? எல்லாருமே விவரம் தெரிஞ்சவங்க….

என்ன நடக்கும் எல்லாருக்குமே தெரியும். கட்டாயப்படுத்தி அழைக்க வேண்டிய அவசியமில்லை.இன்றைய நிலையில் அதிமுகவில் உள்ள மொத்த தலைமையும் கட்சி தலைமைக்கு அண்ணன் எடப்பாடி வர வேண்டும்   என்பதுதான் ஒட்டுமொத்த கட்சியினுடைய நிலைபாடு என தெரிவித்தார்.

Categories

Tech |