வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்த விவகாரத்தில் காட்பாடி தொகுதி வேட்பாளரும், திமுக பொதுச் செயலாளருமான திரு. துரைமுருகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .
வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதிக்குட்பட்ட குப்பாத்தா மேட்டூர் பகுதியில் நேற்று இரவு திமுக பிரமுகர் திரு. கோபி என்பவர் பணம் பட்டுவாடா செய்வதாக வந்த புகாரை அடுத்து பறக்கும் படையினர் சம்ப படத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது கோபி பணம் பட்டுவாடா செய்தது தெரியவந்தது.
அவரிடம் இருந்து ஐம்பத்தி ஆறாயிரம் ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் திமுக துண்டு பிரசுரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் திமுக பிரமுகர் கோபியை கைது செய்து சிறையில் அடைத்து உள்ள போலீசார், அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் திருவல்லம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர் .
மேலும், காட்பாடி தொகுதி வேட்பாளரும், திமுக. பொதுச் செயலாளருமான திரு. துரைமுருகன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்குகளை பெற முயற்சித்தல் , அவதூறு பேசுதல் மற்றும் அரசு அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .