கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை எப்படித்தான் எழுதினார் என வியந்து பார்ப்பவர்கள் பலர் இருக்கின்றனர். ஆனால் அதையே மிகப்பெரிய பொருட்செலவில் ஒரு பிரம்மாண்ட படமாக இயக்கியுள்ள மணிரத்தினத்தை பார்த்து அனைவரும் வியப்பில் ஆழ்ந்திருக்கின்றனர். முதல் பாகத்தை வெற்றிகரமாக இயக்கி வெளியிட்டு சாதனை செய்துள்ளார் மணிரத்தினம். மொத்தம் 500 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்த படம் போட்ட பணத்தை விரைவில் எடுத்துவிடும் என்று தெரிகின்றது.
மேலும் படம் ரிலீஸ் ஆன நாள் எவ்வளவு வசூலித்தது என்பது பற்றி தயாரிப்பு நிறுவனமே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முதல் நாளில் 80 கோடி வரை வசூலித்த இந்த படம் அடுத்தடுத்த நாட்களில் நல்ல வசூல் வேட்டை நடத்தியுள்ளது. இந்த நிலையில் நேற்று படம் 400 கோடி வரை வசூலித்திருப்பதாக லைக்கா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர். படம் ரிலீஸ் ஆகி 13 நாட்களில் உலகம் முழுவதும் 430 கோடி வரை வசூலித்து விட்டதாம் இதனை அடுத்து விரைவில் 500 கோடியை தொட்டுவிடும் என தெரிவிக்கின்றனர்.