Categories
சினிமா தமிழ் சினிமா

வசூலில் தெறிக்கவிடும் “காந்தாரா” படம்…. உலக அளவில் எவ்வளவு கோடி தெரியுமா?…. வெளிவரும் தகவல்கள்….!!!

நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த “காந்தாரா” படம் சென்ற செப்டம்பர் 30ம் தேதி வெளியாகியது. முதலில் இப்படம் கன்னட மொழியில் மட்டுமே வெளியாகியது. இதையடுத்து கர்நாடகாவில் விமர்சன ரீதியாக இந்த படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதோடு, நல்ல வசூலையும் குவித்தது. அதன்பின் இப்படத்தை மற்ற மொழிகளில் வெளியிட படத் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் முடிவுசெய்தது.

அதன்படி இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் அண்மையில் “காந்தாரா” படம் வெளியிடப்பட்டது. இப்போது அனைத்து மொழிகளிலும் இத்திரைப்படம் வசூலில் சாதனை படைத்துள்ளது. இப்படத்தை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நடிகர் ரஜினிகாந்த் உட்பட பலரும் பாராட்டினர். இந்நிலையில் காந்தாரா படம் உலகம் முழுவதும் இதுவரையிலும் ரூபாய்.400 கோடி வரை வசூலித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் கேரளாவில் ரூபாய்.19.2 கோடியையும், வட இந்தியாவில் ரூபாய்.96 கோடியையும், தெலுங்கில் ரூபாய்.60 கோடியையும், தமிழகத்தில் 12.70 கோடியையும் வசூலித்து இருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் கர்நாடகாவில் மட்டும் ரூபாய்.168.5 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. மேலும் வெளிநாட்டில் ரூபாய்.44 கோடியை வசூலித்து இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Categories

Tech |