நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் திரையுலகின் உச்சத்தை நோக்கி பயணிக்கும் நடிகர்களில் ஒருவர். அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய டான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூலையும் குவித்து இருந்தது. இப்போது டோலிவுட்டில் சிவகார்த்திகேயன் அறிமுகமாகியுள்ள பிரின்ஸ் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த தீபாவளிக்கு பிரின்ஸ் திரைப்படமானது திரைக்கு வந்தது. இந்த திரைப்படம் ரசிகர்களிடம் குறிப்பாக 2கே கிட்ஸ் என அழைக்கப்படுபவர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் தீபாவளியன்று நேற்று மட்டும் பிரின்ஸ் திரைப்படம் தமிழகத்தில் ரூபாய் 6 கோடி வசூல் செய்தது. மொத்தத்தில் இப்படம் தமிழகத்தில் 25 கோடியும், உலகம் முழுவதும் இப்படம் ரூபாய் 35 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.