Categories
மாநில செய்திகள்

வச்ச குறி தப்பவில்லை…. தங்கப் பதக்கத்தை தட்டி தூக்கிய டிஜிபி சைலேந்திரபாபு….!!!!

சென்னை கமாண்டோ படைத்தளத்தில் நடந்த காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. இந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழக முழுவதிலும் உள்ள காவல் ஆணையர்கள், சரக காவல்துறை துணை தலைவர், காவல் கண்காணிப்பாளர்கள் ஆகிய காவல்துறை உயர் அதிகாரிகள் சுமார் 260 பேர் கலந்து கொண்டனர்.

இதில் சாம்பியன் ஆப் சாம்பியன்ஸ் பிரிவில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் முதலிடம் பிடித்தார். டிஜிபி சைலேந்திரபாபு பிஸ்டல் பிரிவில் தங்கமும், ரைபில் பிரிவில் வெண்கலமும், ஒட்டுமொத்த பிரிவில் தங்கமும் வென்றார். சென்னை வடக்கு காவல் கூடுதல் ஆணையர் அன்பு வெள்ளியும் வென்றனர்.

Categories

Tech |