மழை வேண்டி அம்மன் கோவில் திருவிழா பூஜை நடைபெற்றுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் மறுகாலங்குளம் பகுதியில் வடகாசி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் வளாகத்தில் மழை வேண்டி திருவிளக்கு பூஜை நேற்று நடைபெற்றது.
இந்த பூஜையில் காளியம்மன், வடக்காசி அம்மன், பிரித்தியங்கரா அம்மன், நவகிரகம், கணபதி ஆகிய ஸ்வாமிகளுக்கு சிறப்பு பூஜைகளும் அலங்காரங்களும் செய்யப்பட்டது.
அதன் பின் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதே கோவிலில் நடந்த திருவிளக்கு பூஜையில் திரளான பெண்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.