தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் சென்னையில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் சென்னை புளியந்தோப்பில் பால்கனி இடிந்து விழுந்து பெண் ஒருவரும், வியாசர்பாடியில் மின்சாரம் பயந்து ஆட்டோ ஓட்டுநர் ஒருவரும் இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா நான்கு லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் வட கிழக்கு பருவமலையால் இதுவரையும் மிகப்பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. பருவமழை எதிர்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளார்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எந்த இடங்களில் பிரச்சனை இருந்தாலும் சரி உடனே அதிகாரிகளை அனுப்பி அதை சரி செய்யப்படும் என்று கூறியுள்ளார்.