Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்…? வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் விளக்கம்…!!!!!

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த நிலையில் அது ஞாயிற்றுக்கிழமை மாலை புயலாக தீவிரமடைந்திருக்கிறது. அந்த புயல் வங்கதேசத்தின் வடமேற்கிலிருந்து வடகிழக்கு திசையில் செல்கின்ற நிலையில் அந்த நாட்டின் டெங்கோனா தீவு மற்றும் சங் இப் பகுதிகளுக்கு இடையே செவ்வாய்க்கிழமை காலை கரையை கடக்க இருக்கிறது. இந்த புயல் காரணமாக ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தின் கொல்கத்தா மற்றும் அதை ஒட்டியுள்ள ஹவுரா மற்றும் ஹூக்ளி மாவட்டங்களில் திங்கட்கிழமை மிதமான முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலையில் பிற்பகுதியில் எதிர்பார்க்கப்படும் பரவலான மழை மாநிலத்தின் தீபாவளி மற்றும் காளி பூஜை கொண்டாட்டங்களில் உற்சாகத்தை குறைக்க கூடும்.

மேலும் கொல்கத்தாவில் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் இதனால் காளி பூஜை கொண்டாட்டங்களுக்காக அமைக்கப்பட்டிருக்கின்ற சந்தைகள் பாதிப்பு ஏற்படலாம். எப்படி இருப்பினும் கொல்கத்தாவில் உள்ள பிரபலமான காளிகார்ட் தக்ஷனேஸ்வரர் மற்றும் தாந்தானியா போன்ற காளி கோவில்களுக்கு அதிகாலை முதல் பக்தர்களின் உற்சாகத்தை காலை பெய்த மழையால் தணிக்க முடியவில்லை. மேலும் மேற்கு வங்காளம் மற்றும் வங்கதேசத்தில் உள்ள சுந்தர்பன் பகுதி சூறாவளி புயலால் கடுமையாக பாதிக்கப்பட கூடும் இன வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்த பகுதியில் மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு இணைப்புகள் பாதிக்கப்படலாம் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் சித்ரகாங் புயலால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இல்லாத நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் அக்டோபர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுந்தர்பன் பகுதியில் படகு சேவைகள் மற்றும் கடலோர ரிச்சாட் நகரங்களான திகா மந்தர் மோனி ஷங்கர்பூர் மற்றும் சாகர் போன்ற பகுதிகளிலும் படகு சவாரிகள் நிறுத்தப்பட்டு இருக்கிறது.

சித்ராக்கா புயல் காரணமாக வழக்கமாக அக்டோபர் மூன்றாவது வாரம் இறுதியிலேயே அல்லது நாலாவது வாரத் தொடக்கத்திலேயே தொடங்கும் வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் தற்போது காலதாமதமாக இருக்கிறது. இந்த புயல் கரையை கடந்த பின் தான் வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும் என்பதற்கான சாத்திய கூறு இருக்கிறது என்பதை கணிக்க முடியும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த நிலையில் வழக்கத்தை விட ஒரு வாரம் தாமதமாகவே நாடு முழுவதும் என்று தென்மேற்கு பருவமழை விடை பெற்றுள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Categories

Tech |